Tamil

வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வாண்டு முதலே தமிழ்த்துறை மூலம் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் பொதுத்தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் மொழிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கல்வியாண்டில் படித்த மாணவர்கள், பல்கலைத் தரவரிசையில் இடம் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளனர்.

தமிழ்த்துறை தொடர்ந்து பொதுத்தமிழ் மற்றும் முதன்மைப் பாடங்களில் பயிலும் மாணவர்கள், கல்வி ஆண்டு முழுவதும் பல்கலைக்கழகத் தரவரிசையில் பல கல்லூரிகளில் நடைபெறும் திறன்மேம்பாடு சார்ந்த பல போட்டிகளில் கலந்து கொள்ள ஆயத்தப்படுத்துகிறது.

தமிழ்த்துறை, தகுதியான பேராசிரியர்களைக் கொண்டு இயங்குகிறது, பெரும்பான்மையான பேராசிரியர்கள் உலகளாவிய இதழ்கள்  மற்றும் இணையங்களில் அறிவுசார்ந்த படைப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். மாணவர்களின் படைப்புத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பல்துறை மாணவர்களின் ஆராய்ச்சி அறிவை மேம்படுத்த தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளையும், தமிழ் தொடர்பான பல்வேறு துறைகளில் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிலரங்குகளையும் நடத்துகிறது. உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விருந்தினர் விரிவுரைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் நிகழ்வுகள் துறை சார்ந்து  நடத்தப்படுகின்றன.

பாடத்திட்டங்களுக்கு அப்பால் மாணவர்களின் அறிவு மற்றும் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் வகையில், டிப்ளமோ படிப்புகள், மாணவர் கருத்தரங்குகள் மற்றும் இலக்கிய மன்றங்கள் ஒவ்வொரு செமஸ்டரிலும் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பாரதியார் விழா, திருக்குறள் விழா, மாணவர்களின் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. துறை மாணவர்கள் கல்லூரி, பல்கலைக்கழகம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்று வருகின்றனர்.

மாணவர்களின் நலன் கருதி நூலகத்தில் 1000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு செமஸ்டருக்கான பாடப்புத்தகங்கள் புத்தக வங்கி மூலம் துறை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்களின் வாசிப்பு திறனை வளர்க்க வாசகர் சங்கம் நடத்தப்படுகிறது. மாணவர்கள் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள் மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். மாணவர்களின் படைப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், காலாண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மின் இதழை மாணவர்கள் நடத்துகிறார்கள்.

  • மாணவர்களிடம் மொழியியல் அறிவை வளர்த்தல்.
  • தொழில்முறை மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை வளர்ப்பது.
  • கலைப் படைப்புகளை உருவாக்குவதற்கான வழியை வழங்குதல்.
  • மொழியில் தேர்ச்சியை மேம்படுத்துதல்.
  • பல துறைகளில் போட்டியை எதிர்கொள்ளும் திறன் மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுதல்.

 

  • மொழியியல் கூறுகளின் ஆழமான அறிவின் வளர்ச்சி.
  • மொழியின் இலக்கிய இலக்கணக் கொள்கைகளை அறிந்து கொள்ளுங்கள்.
  • மாணவர்களை ஆராய்ச்சியை நோக்கி செலுத்துங்கள்.
  • பாரம்பரியம் மற்றும் புதுமையுடன் மொழித் திறனை வளர்த்தல்.
  • மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த ஆராய்ச்சி தொடர்பான நிகழ்வுகளை நடத்துதல்.
  • பணியிடத்தில் முழுமையான ஆளுமையை உருவாக்குதல்.
 
NAME OF THE FACULTY DESIGNATION QUALIFICATION EXPERIENCE AREA OF INTEREST
DR M. ABIRAMI ASSOCIATE PROFESSOR M.A,MPHIL,PHD,PG DFL,PGDTA,PGDSS 16Y 2M SCHOLAR IN THAMILOLOGY
MR K. SURESH ASSISTANT PROFESSOR M.A,MPHIL,B.ED 8Y 9M ILAKKIYAM,ILAKKANAM,MODERN LITERATURE
MR K. SARAVANAN ASSISTANT PROFESSOR M.A,MPHIL,B.ED 12 Y 2 M IKKALA ILAKKIYAM,TIRANAIVU,ILAKKANAM.
DR SSN CHANDRASEKARAN PROFESSOR M.A,M.A {MC&J },MPHIL,PHD,NET 24 YEARS MODERN LITERATURE,JOURNALISM
DR K. RAMESH ASSISTANT PROFESSOR M.A,MPHIL,PHD. 1 Y 6 M MODERN LITERATURE-KAVITHAI,SIRUKATHAI NAVAL

  வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் 30.03.2022 அன்று தமிழ்த்துறை நடத்திய  தமிழ்ச் சமண பௌத்தக் குறியீடுகளும் வாழ்வியலும் எனும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம்  தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. உதவிப்பேராசிரியர் திரு. .சரவணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர்           முனைவர்     .ஜெயசந்திரன் அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவா் மா. அபிராமி  அவர்கள் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள். முனைவர் செ.சு. நா.சந்திரசேகரன் அவர்கள் விருந்தினர் அறிமுகவுரையை நல்கினார். சிறப்பு விருந்தினர் திருவினோத் மலைச்சாமி, தொல்லியல் ஆய்வாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் அவர்கள்  ‘தமிழ்ச் சமண பௌத்தக் குறியீடுகளும் வாழ்வியலும்என்னும் தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் நிறைவாக       உதவிப் பேராசிரியர்  கு. சுரேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.                   முனைவர்  . பாவலன் அவர்கள் நோ்த்தியாக நிகழ்ச்சியினைத் தொகுத்து  வழங்கினார். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் இவ்விழாவினை ஒருங்கிணைக்க நாட்டுப்பண்ணுடன் விழா சிறப்பாக நிறைவுபெற்றது.

காணொளியில் காண்கhttps://youtu.be/xUkHE7wzAVc




வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் 13.01.2022 அன்று   பொங்கல் திருவிழாவானதுவாகை 2023′ என்ற பொருண்மையில் தமிழ்த்துறை சார்பாக நடத்தப்பட்டது. கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்ற இவ்விழாவை வேல்டெக் கல்வி நிறுவனக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான கர்னல்., முனைவர். திரு. ஆர்.ரெங்கராஜன் அவர்கள் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார். வேல்டெக் கல்வி நிறுவனக் குழுமத்தின் துணை நிறுவனத்தலைவரான முனைவர். திருமதி. சகுந்தலா ரங்கராஜன் அவர்கள் இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தார். வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியின் முதல்வரான முனைவர். திரு. .ஜெயச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலோடு பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

NAME OF THE EVENT NAME OF THE ORGANIZER/COORDINATOR Guest Speakers Inviation Link  image Only Document  report in Word only  Events & Photos
TAMIL CLUB INOCRATION TAMIL DEPT. PROF.Dr. M.VIJAYAKUMAR https://drive.google.com/drive/search?q=AA  03/10/2023 அன்று வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் இலக்கிய மன்றம் வாகை-2023 சார்வில் இனவுணர்வும் , தமிழுணர்வும் மிக்க விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு முதல்வர் முனைவர் த ஜெயச்சந்திரன் தலைமை ஏற்க, துணை முதல்வர் முனைவர் சசிகலா அவர்கள் முன்னிலையுரை ஆற்றினார்கள். தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ம. அபிராமி ஒருங்கிணைப்பு செய்திருந்தார். வரவேற்புரையைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் சுரேஷ் செய்தார். சிறப்புப் பேச்சாளர் முனைவ்ர்  விஜயகுமார் அவர்கள் சிறப்பாக மாணவர்களிடம் பேசினார்.  போட்டியில் பரிசு பெற்ற மாணாவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். நன்றியுரையை முனைவர் ம. அபிராமி அவர்கள் கூறினார்கள். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. TAMIL
 
Scroll to Top